“சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்திருக்கிறோம்" – மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், 40 பரிசீலனையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin

சென்னை :சென்னையில் இன்று ‘தேர்தல் வாக்குறுதிகளில் மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன’ என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர்.

அப்போது, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என தகவல் தெரிவித்தனர்.

தற்பொழுது, அமைச்சர்கள் கூறியதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ”திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் விளக்கி உள்ளனர்.

காலை உணவு, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை. முந்தைய ஆட்சியின் 10 ஆண்டு கால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, மத்திய பாஜக வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node