அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED சோதனை – இல்லம் முன்பு குவிந்த தொண்டர்கள்.!

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சரின் இல்லம் முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர்.

IPeriyasamy - EDRaid

சென்னை :திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று காலை முதல்  சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம், திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகளில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைகள் தொடங்கியபோது, அமைச்சரின் ஆதரவாளர்கள், குறிப்பாக திமுக தொண்டர்கள், அவரது இல்லத்திற்கு முன்பு குவிந்தனர், இதனால் பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது. ஆயினும், காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை (CRPF) பாதுகாப்புடன் சோதனைகள் தொடர்ந்தன.

இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் அமலாக்க நிறுவனங்களால் திமுக தலைவர்களை குறிவைப்பதாக திமுக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியதால் அரசியல் பதற்றத்தை உருவாக்கியது. இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சொத்து மற்றும் நிதி ஆவணங்களை ED அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.