சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல, அசாம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, விசிக துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் இந்த சோதனை நேற்று மாலை வரை நடைபெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு சிலர் இணையதளம் […]
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. அங்கு விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு , உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.25 லட்சத்திற்கு பிணை, ஆமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக நியமனம் செய்வபடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
டெல்லி : உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். […]
டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கு விசாரணையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி அமலாக்கத்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஒரு தனியார் நகைக்கடைக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நகைக்கடைக்காரரின் மகனை விசாரணையில் இருந்து விடுவிக்க டெல்லி அமலாக்கத்துறை அதிகாரி முயற்சித்ததாக கூறப்படுகிறது. வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு கிடைத்த புகாரின் பெயரில் டெல்லி […]
அமீர் : போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகிய இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விசாரணை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த போதைப்பொருள் வழக்கில் ஜாபர் […]
டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினரிடம் பதில் இல்லை என்றால் நாளை பதிலுடன் வாருங்கள். – உச்சநீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் விசாரணை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை அடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது நடவடிக்கைகளின் போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அப்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை […]
சென்னை: கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்ட விசாரணை நடைபெற்று , தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று, பிற்பகல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, […]
டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறையின் இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை முன்னதாக நடைபெற்று வந்தத நிலையில் இன்று நடைபெற்ற […]
டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் கடத்தியாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் என்று அப்போது கூறப்பட்டது. ஜாபர் சாதிக் தமிழகத்தில் பிரதான கட்சியில் முன்னாள் பிரமுகராகவும் […]
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரின் கீழ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றகாக கூறி அமலாக்கத்துறை அப்போது, ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்தது. பின்னர் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த வாரம் […]
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்ற சோரன் தரப்பு, மீண்டும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். ஜார்கண்ட் மாநில முன்னாள் […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அமலாக்காதுறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி, 21 நாட்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், நாளை ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைய வேண்டும். இதற்கிடையில், தனது மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டி மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி டெல்லி சிறப்பு […]
டெல்லி: ஜூன் 1 வரையில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் கடத்தப்பட்டதாகவும், இவர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டன. டெல்லியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன் போதை பொருள் […]