திண்டுக்கல் : த.வெ மாநாட்டில் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். எனவே, விஜய் பேசிய விஷயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்களை […]
ராமநாதபுரம் : 1924ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1957, செப்டம்பர் 11இல் படுகொலை செய்யப்பட்டார். அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு இன்று அரசியல் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்றனர். இம்மானுவேல் சேகரனார் நினைவுதினம் […]
Supreme Court: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக ஒதுக்கியதாக புகாா் எழுந்தது. இதன்பின் கடந்த 2012 அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான […]
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது வீட்டுவசதி துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகருக்கு மாற்றியது என அவர் மீது வழக்கு பதியப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் பதியப்பட்ட இந்த வழக்கானது எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று […]
லண்டனில் நிறுவப்பட்டுள்ள கர்னல் பென்னி குயிக் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயதிற்கான தேவையை பூர்த்தி செய்ய தேனி அருகே கேரளாவில் முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் காட்டினார் கர்னல் ஜான் பென்னி குயிக். . இவரை கவுரவப்படுத்தும் விதமாக ஆளும் திமுக சார்பில், லண்டனில் பென்னி […]
அதிமுக ஆட்சியில் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு. தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது எனவும்,முறைகேடுகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும்,தமிழக கூட்டுறவு சங்கங்களில் ரூ.4816 கோடி […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம். தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக,நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன்,பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.மேலும்,இன்றைய தினத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் […]
திமுக என்பது ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் என்றும்,எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது எனவும்,அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில்,கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் […]
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.அதன்படி, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023 ஆண்டு வரை உள்ள நிலையில்,அதனை ரத்து […]
கூட்டுறவு சங்கங்களின் 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அதாவது,சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களில் பரப்பளவை அதிகரித்து காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளதாகவும்,சேலம் ,நாமக்கலில் மட்டும் […]