வெற்றி நிச்சயம்! அண்ணன் செங்கோட்டையனை வரவேற்கிறேன்- விஜய்!

50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

vijay about Sengottaiyan

சென்னை :தமிழக அரசியலில் இன்று மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் கொங்கு மண்டல வலுவான தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் நேரில் இருந்து செங்கோட்டையனையும் அவரது ஆதரவாளர்களையும் உற்சாகமாக வரவேற்றார்.

நேற்று சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்த செங்கோட்டையன், இன்று முறையாக தவெக கொடியை ஏற்று உறுதிமொழி ஏற்றார்.விழாவில் விஜய் செங்கோட்டையனுக்கு பொன்னாடை போர்த்தி, கட்சித் தொண்டையை அணிவித்து சிறப்பு செய்தார். அதேபோல் செங்கோட்டையனும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, மலர்த் தொடர் அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

செங்கோட்டையனுடன் வந்த சத்தியபாமா உள்ளிட்ட பல ஆதரவாளர்களுக்கும் விஜய் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். இணைப்பு நிகழ்வு முழுவதும் தவெக தொண்டர்களின் உற்சாக ஆரவாரத்துடன் நடைபெற்றது.இணைந்த சில நிமிடங்களிலேயே விஜய் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்தார். கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் செங்கோட்டையனின் இணைப்பு வீடியோவைப் பதிவேற்றி “ஐம்பது ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் உழைத்த அனுபவசாலி செங்கோட்டையன் தவெகவுக்கு உறுதுணையாக இருப்பார்” என்று விஜய் புகழாரம் சூட்டினார்., “தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் செங்கோட்டையன் வரவேற்கிறேன். அவரது அனுபவமும் ஈடுபாடும் நமது இலட்சியப் பயணத்தில் பெரும் பலமாக அமையும். நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்!” என்று கூறினார்.

unknown node