வெற்றி துரைசாமி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.!

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில்

Vetri Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து  இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று இரவு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்றைய தினம் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் அஞ்சலி..! கூட்ட நெரிசலால் அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிய விஜய்

இந்த நிலையில், நேற்று அஞ்சலி செலுத்த இயலாத திரை பிரபலங்கள் இன்று காலை முதல் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.