"யப்பா.. உன் கூட அரசியலா" – போஸ் வெங்கட் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.!

விஜய் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.

Bose Venkat tvk vijay

சென்னை :தவெக மாநாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், அதிக விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது. அது மட்டுமின்றி, விஜய் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.

அந்த வகையில், விஜய்யின் பேச்சை, திமுக ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் கிண்டல் செய்துள்ளார். அவரது தனது எக்ஸ் தள பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி. வியப்பு. எழுதிக்கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு.. பார்ப்போம்” எனக் கூறினார்.

unknown node

இதனை கண்ட விஜய் ஆதரவாளர்கள் போஸை வச்சி செய்து வருகிறார்கள். “என்னடா உங்க லாஜிக்….இன்னும் கதறல் எதிர்பார்க்கிறோம்” என்று கூறி பதிலடி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை கங்குவா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய வெங்கட், சூர்யா போன்ற ரசிகர்களை படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அவ்வளவுதான் ஆனால், ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று கூறியதற்கு விஜய்யை பற்றி தான் பேசியிருக்கிறார் என கொதித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

unknown node