யுபிஎஸ்சிக்கு இணையாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும்.! அதிமுக அமைச்சர் பேச்சு.!

- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இருந்ததால் தமிழக சட்டப்பேரவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் தனபால். இதைத்தொடர்ந்து நேற்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தெரிவித்தார். இதுபோல் நிகழ்வு வருக்காலங்களில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மாற்றப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசுவ முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025