திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பே இல்லை எனவும், தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசும், தலா 2,500 ரூபாய் பணமும் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று சென்னை, தரமணி பகுதியில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 ரூபாயை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், […]
கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரின் உருவப்படத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடது என உத்தரவிட்ட போதும், அதனை மீறி ஆ.ராசா செயல்பட்டு […]
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் 142-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை பாரி முனையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்குக் அமைச்சர்கள் ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், இராஜாஜியின் புகழ் இந்த மண்ணில் என்னென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து ? யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த விவகாரத்தில் உரிய தீர்ப்பு கிடைக்கும். மறைந்த […]
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் 18,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்வடி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கடன்பெறும் திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று திமுக எம்எம்ஏ பழனிவேல் தியாகராஜன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகாத ஊருக்கு வழிதேடுவது தான் திமுகவின் செயல் கூறிய அவர் […]
சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சாக்லேட் பாய் என உதயநிதி ஸ்டாலினை கூறினார். இது கூறியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை, சொன்னவர் ஒரு Play Boy என பதிலளித்தார். இந்நிலையில், இன்று காசிமேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அப்போது சாக்லேட் என்றால் ஸ்வீட் என்பதால் நல்ல அர்த்தத்தில்தான் உதயநிதி பற்றிய கருத்து கூறினேன். ஆனால், உதயநிதி, அவங்க அப்பா, அவர் […]
இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்ததார். இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தபிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்த நிலையில் சீறிய நடவடிக்கையின் அடிப்படையில் அதிக பாதிப்புகள் இருந்த ராயபுரம் மண்டலம் விரைவில் […]
உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி வரை பயணம் செய்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையிலுள்ள யானைக்கவுனில் நடத்தி வரும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்ததை பின்னர் அங்குள்ள மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கொரோனாவிற்கான விழிப்புணர்வை தன்னார்வலர்களை கொண்டு சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடத்தியது நல்ல பலனை அளித்துள்ளதாக கூறியுள்ளார். […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஒளிவு மறைவின்றி கணக்கு கொடுக்கப்படுகிறது. திருச்சி, திருவண்ணாமலை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாய பிரச்னை என்பதால் முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும், இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்கள் […]
தமிழக அரசு தெர்மல் ஸ்கேனரை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், தெர்மல் ஸ்கேனர் வாங்கியது தொடர்பான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக குறிப்பிட்டார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா […]
கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும் சேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகளும், எழும்பூர் தொகுதியின் 2 வார்டுகளும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும். ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும், துறைமுகம் தொகுதியில் 1,456 […]
தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது . தற்போது 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் […]
குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சார்ந்தவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். செங்கல்பட்டு சேர்ந்த ஒருவர் குவைத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செங்கல்பட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுதிய கடிதத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த செங்கல்பட்டு சேர்ந்த 56 வயதான பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு […]
தமிழக சட்டசபை கடந்த 09-தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11-ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி ,எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து சனி , ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நடைபெறவில்லை இதையடுத்து இன்று திங்கள்கிழமை மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்றைய தினத்தில் அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையாரின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு […]
டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலத்தையொட்டி தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும் என்றும் இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மார்ச் 6ம் தேதியன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, அன்று […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இருந்ததால் தமிழக சட்டப்பேரவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் தனபால். இதைத்தொடர்ந்து நேற்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி எடுக்கப்பட்டுள்ள […]
தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுகவினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, குத்துச்சண்டை […]
ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் […]
சட்டசபை கேள்வி நேரத்தில் பேசிய ஜெயக்குமார்,ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க […]