நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். நிவர் மற்றும் புரவி புயல் குறித்ததான வெள்ள பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக முதல்வர் நேற்று கடலூர் சென்று ஆய்வுகளை முடித்துக்கொண்டு இரவு நாகை வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று தங்கியிருந்தார். இன்று நாகையில் வெள்ளம் குறித்ததான ஆய்வை துவங்குவதற்கு முன்னதாக நாகை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற காலை நேர பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வருக்கு […]
நிவர் புயல் காரணமாக வரவேற்பு பந்தலில் காற்றடித்து, கம்பம் சரிந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணனுக்கு முதல்வர் நிதி உதவியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர் புயல் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் எதிர்பாராத சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக சிலர் உயிரிழந்தனர். […]
நிவர் புயல் காரணமாக புயலும் மழையுமாக இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், புதன்கிழமை புயல் காரைக்கால் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குறித்துப் பல்வேறு மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு […]
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது, ராமதாஸ் கண்டனம். கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் ஆளுனர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக […]
வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அரசு கடந்த சில மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அன்று தமிழ் திரையுலகினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு […]
வேலூர் கொரோனா தடுப்பு நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அதன்பிறகு தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டு உள்ளார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் வருவதை அறிந்த அதிமுகவினர் அவரை […]
தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள நிறுவனத்திற்கு காணொளி காட்சி மூலம் பந்தக்கால் நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனாவால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்க கூடிய சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக வெளியில் நடமாட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. அவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்பொழுது 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் […]
நிலோபர் கஃபில் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என முதல்வர் ட்வீட். உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், உயிர் இழக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை மாநகராட்சியில் தான் கொரோனாவின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலருக்கு சிகிச்சை நடை பெற்றும் வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கஃபில் அவர்களுக்கும் அண்மையில் […]
குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ (Paul Harris Fellow) எனும் விருதினை அமெரிக்காவை சேர்ந்த ரோட்டரி அமைப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் செயல்பட்டு வருகிறது ரோட்டரி அமைப்பானது, உலகில் பல்வேறு பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு கவுரவ விருது அளித்து பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கவுரவ […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 30,152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பொருளாதரத்தை பாதித்துள்ளது – முதல்வர் உரை.! இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இருந்ததால் தமிழக சட்டப்பேரவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் தனபால். இதைத்தொடர்ந்து நேற்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி எடுக்கப்பட்டுள்ள […]
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பிறகு பேசிய பாகவி, சிஏஏ, என்ஆர்பி, என்ஆர்சி ஆகியவற்றின் […]