"தூத்துக்குடி மின் உற்பத்தி நிறுத்தம்"பாதிக்கப்படும் மின் உற்பத்தி "அவதிப்பட போகும் மக்கள்"..???

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்ததன் காரணமாக, 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்ததன் காரணமாக, 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

unknown node

மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 15 நாள்களாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரியின் இருப்பு குறைவால், மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கையிருப்புக் குறைவினால், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, டெல்லிக்குச் சென்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ்கோயலைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

unknown node

இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி கொடுக்கும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய முடியும். இதிலுள்ள முதல் மூன்று யூனிட்டுகள், நிர்ணயிக்கப்பட்ட கால அளவையும் தாண்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இதனால், யூனிட்டுகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவருகிறது. 2-வது யூனிட்டில், நேற்று மின் உற்பத்தி  நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று 1-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்த அனல்மின் நிலையத்தில், கடந்த 2 நாள்களாக நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நிலை நீடித்தால், மீதமுள்ள 3 யூனிட்டுகளிலும் உற்பத்தி நிறுத்திவைக்கப்படும் அபாயம் ஏற்படும். இதனால், மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

DINASUVADU