Tag: POWER PLANT

தூத்துக்குடி அனல்மின் நிலையம் – நிலக்கரி வருகைக்கு மின் உற்பத்தி சீரானது..!

நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து மின் உற்பத்தி சீரானது.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்தது. இதையடுத்து தற்போது அங்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

POWER PLANT 2 Min Read
Default Image

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு…!!

வடசென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 வது அலகில் 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் 600 மெகா வாட் மின்சாரமும் என 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொதிகலனில் […]

#Chennai 2 Min Read
Default Image

“தூத்துக்குடி மின் உற்பத்தி நிறுத்தம்”பாதிக்கப்படும் மின் உற்பத்தி “அவதிப்பட போகும் மக்கள்”..???

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்ததன் காரணமாக, 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 15 நாள்களாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரியின் இருப்பு குறைவால், மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கையிருப்புக் குறைவினால், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, […]

#Thoothukudi 5 Min Read
Default Image

“நிலக்கரி இல்லை”1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் உள்ளன. இதில் இரண்டு அலகுகளில் ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் […]

POWER PLANT 2 Min Read
Default Image