சென்னையில் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்..! அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

thangam thennarasu

சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் … Read more

திருமண விழாவில் பவர் கட்… மாப்பிளையை மாற்றிய 2 சகோதிரிகள்!

மத்தியப் பிரதேசத்தில் திருமண செய்யும் நேரத்தில் பவர் கட் இருந்ததால் மாப்பிளையை மாற்றி மணமுடித்த சகோதிரிகள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா என்ற கிராமத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் திருமணம், மின்சாரம் துண்டிப்பு (POWER CUT) காரணமாக தவறான மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பாரின் இரண்டு மகள்கள், … Read more

பவர் கட்.. வாட்டர் கட்.. ஆனால் Money கட் மட்டும் இல்லை – சீமான் விமர்சனம்

உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் என சீமான் பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திமுக, அதிமுகத்தான் ஆண்டுள்ளது. தமிழக்தில் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை, வாங்குவதில் தான் முதலீடு செய்யப்படுகிறது. … Read more

“அவதூறு பரப்பினால் நடவடிக்கை” – அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு. மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் … Read more

மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்…! ஒருவர் உயிரிழப்பு..!

ராஜஸ்தானில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர். ஒருவர் உயிரிழப்பு.  ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள  புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தனர். அவர் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதனையடுத்து மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற … Read more

சரியாக வரி செலுத்துபவர் என்ற முறையில் இதை அறிய விரும்புகிறேன்..! தோனி மனைவியின் அதிரடியான ட்வீட்..!

சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது. அந்த வகையில், மத்திய … Read more

#BREAKING: மின்வெட்டு – சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் 17,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், 13,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெளிமாநிலத்தில் … Read more

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை…! எந்தெந்த இடங்களில் தெரியுமா…?

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை. சென்னையில் 25.06.2021 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரி பகுதி : செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு வரை, பார்வதி … Read more

மின் தடை ஏற்பட காரணம் முன்னாள் அரசுதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்மிகை மாநிலம் சொல்லும்போது ஏன் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. பராமரிப்புப் பணிகளால் தான் … Read more

இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்.ஐ.. தண்டனையாக கிடைத்த பவர் கட்!

இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் மின் வாரிய ஊழியர், காவல் நிலையத்திற்கு மின் வசதியை துண்டித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. வாகன சோதனை நடத்தினார். அப்பொழுது உரிய ஆவணங்களின்றி, 3 பேருடன் பயணம் செய்த ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். அது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இருசக்கர வாகனம் என விசாரணயின்போது தெரியவந்தது. போலீசாரின் இந்த செயல் குறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகாரளித்தார். … Read more