தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்!

The 35th phase of the investigation into the Thoothukudi Sterlite shooting incident began today.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. இதில் 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த என். வெங்கடேஷ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை தொடர்ந்து 34-வது கட்ட விசாரணையும் நிறைவடைந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 35-ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு கலவரத்தின்போது நெல்லை சரக டிஜிபி ஆக இருந்த கபில்குமார் நேரில் ஆஜராகியுள்ளார்.