அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை […]
செவ்வாயன்று, மேற்கு வங்கத்தில் TMC அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக நடத்திய ‘நபன்னா சலோ’ போராட்ட ஊர்வலத்தின் போது, ஏற்பட்ட வன்முறை மோதல்களில் காவல்துறை அதிகாரிகள், பாஜக ஆதரவாளர்கள் என பலர் காயமடைந்தனர். ‘நபன்னா சோலோ’ பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் அவர் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில்,13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில்,காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை […]
இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது […]
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,பல முக்கிய நகரங்களில் இன்றும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது. இதனையடுத்து,வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது எனவும்,வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின்மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. […]
அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த […]