தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது’ என காவல்துறையினர் கூறுவது உண்மை தானா? எனும் சந்தேகத்தை ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்புகிறது. கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி செல்வராஜ். இவருக்கு வயது 46. கடந்த 22ம் தேதி மதியம் 1 மணியளவில் தனது மகளின் நீராட்டு விழாவுக்கு தனது அலுவலகத்தில் பத்திரிகை கொடுத்து விட்டு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் பாளையங்கோட்டை சாலையில் இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு வந்துள்ளார். தனது மனைவிக்கு ஃபோன் மூலம் […]
தூத்துக்குடியில் காவல்துறையே தீ வைக்கும் வைரல் வீடியோ வெளியிடப்படதால் இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் என்ற பகுதியில் போலீசாரே அங்குள்ள படகிற்கு தீ வைத்துள்ளனர் . https://theekkathir.in/wp-content/uploads/2018/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80.mp4 மேலும் ஸ்டெர்லைட் தொடர்பான செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து இன்று 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர்கள் மற்றும் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 […]