இவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு

Minister Sekarbabu has announced that Rs. 3,000 will be given to Oduwar training school students from this month.

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஊக்கத் தொகை குறைவாக இருக்கிறது என கருதி அதை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ் இசைச் சங்கம் சாா்பில் 79-ஆம் ஆண்டு தமிழ் இசை விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று தொடங்கியது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயில தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.