பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, 2024 பொங்கல் பரிசு வழங்கிய சிறப்பு பணிக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா கணக்கிடப்பட்டு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு […]
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையிலும் பணியை தொடரும், தங்களது உடல் நலத்தையோ, குடும்பத்தையோ […]
முதல்வர் தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 180 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 180 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அவர்களுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி, விருதுகளையும் வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையும், 2 மாத ஊதிய நிலுவை தொகையும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவர்கள் என்பதையும், கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் அம்மா மினி கிளினிக்குகளில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.1 கோடி “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து 19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் […]
சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார். சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் […]
ஓதுவார் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் ஓதுவார் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் சேர தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் துவக்கி வைத்தார். அர்ச்சகர், ஓதுவார், இசை கற்போர் பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, […]
ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஊக்கத் தொகை குறைவாக இருக்கிறது என கருதி அதை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ் இசைச் சங்கம் சாா்பில் 79-ஆம் ஆண்டு தமிழ் இசை விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று […]
சென்னை:ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து துறை ரீதியாக பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.அந்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஆனால்,கடந்த 3 […]
தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்படி, பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோருக்கு […]
கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் திட்டதை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, வேப்பேரியில் கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 349 கோயில்களில் இருந்து 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, தேயிலைத்தூள் உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதனிடையே, அறநிலையத்துறைக்கு சொந்தமான திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் […]
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக […]
அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர்,முதல்வர் பேசியதாவது: “மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செய்ய அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும்.எனவே,எனது உரையை சுருக்கமாக கூறுகிறேன். நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று […]
திருக்கோவில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1749 பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 4-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில், திருக்கோவில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இது குறித்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டில் 12ம் வகுப்பு […]