Minister Sekarbabu: வடசென்னையில் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல் வடசென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது, திமுக அமைச்சர் சேகர்பாபு-க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. வடசென்னை எம்.பி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று திமுக, அதிமுக […]
இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]
சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது […]
மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. – அமைச்சர் சேகர் பாபு கருத்து. தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவந்தராஜன் தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி மற்றும் , திமுக கூறும் திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை விமர்சித்து கருத்து கூறிவந்தார். இந்த கருத்துக்கு எதிராக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. இதனால் தமிழிசை […]
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல். வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த […]
நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஊக்கத் தொகை குறைவாக இருக்கிறது என கருதி அதை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ் இசைச் சங்கம் சாா்பில் 79-ஆம் ஆண்டு தமிழ் இசை விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று […]
தமிழக காவல்துறை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில். சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை. டிஜிபியின் கையில் இருந்து காவல்துறை நழுவிவிட்டது. ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்தை பேசியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். பொறுமைக்கும் ஒரு எல்லை […]
நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் 8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார். இதன்பின் வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், […]
காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் மீட்க்கப்பட்ட கோயில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி என தெரிவித்தார். இன்னும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. விரைவில் அவற்றை மீட்போம். இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலநூறு கோடிகள் இந்தாண்டு […]
அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் இன்று முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை நேற்று […]
அடுத்த வாரத்திலிருந்து அன்னை தமிழில் அர்ச்சனை என்பது செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர்கள் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அவர்களே இந்து சமய அறநிலைத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை கண்டு பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விரைவிலேயே தமிழகத்தில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற விளம்பர பலகையுடன் 47 […]
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு […]
தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில்,”இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள்,மனைகள் மற்றும் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.இதனால், அவற்றின் வாடகைத் தொகை,குத்தகைத் தொகை மற்றும் குத்தகை […]