இன்னும் நான்கு மாதத்தில் வழி பிறக்கப் போகிறது – மு.க.ஸ்டாலின்

"Despite being the leader of the opposition, I have been able to carry out the tasks of the people without fail," Stalin said.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் பேசிய அவர், எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம்.

அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவப்புரம் திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது. இன்னும் நான்கு மாதத்தில் நமக்கு வழி பிறக்கப்போகிறது.  எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டு காலம் நாம் ஆட்சியில் இல்லை என்றாலும், கொரானா காலத்தில் உலகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு நாம் ஒன்றினைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.