"5 பேர் உயிரிழப்பு., அரசு கவனம் செலுத்தவில்லை" தவெக தலைவர் விஜய் வேதனை.!

விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

merina air show - vijay

சென்னை :மெரீனா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழா சாகச் நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில் ஐந்து பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

மக்கள் அதிகளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை தேவைகளை செய்வதில், அரசு இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் தள பக்கத்தில், ” சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது.

அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node