நேபாளுக்கு புனித யாத்திரை சென்றவர்களை மீட்க வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேபாளில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு இந்த மாதம் 11-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் இருந்து 24 பேர் புனித யாத்திரை சென்றனர்.தற்போது அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே இவர்களும் இவர்களைப் போல பலரும் அங்கு சென்று வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உரிய நேரத்தில் அவர்களை அங்கிருந்து மீட்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
unknown node