இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல்.

நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது.

எனினும். பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது.இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node