தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். கடந்த ஜூலை 1-ஆம் தேதியை கணக்கிட்டு […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீத உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தல். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி ஜூலை முதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் […]
தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி ஆர்ப்பாட்டம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் முன் ஏராளமானோர் சட்டையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி, […]
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் 1 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு, போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் தரவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை முன்தேயிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டும். தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு, ஆட்சி […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் […]
ரேஷன் கடை பணியாளர்கள் கவலைப்படாமல் பணியாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டனர் என்றும் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு […]
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல். தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும். […]