வரும் நவம்பர் மாதம் 12 (அடுத்த ஞாயிற்று கிழமை) தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அன்றைய தினம் விடுமுறை. அதனால், வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு வேலை நாள் எனவும், இந்த வாரம் அனைத்து நாட்களும் வேலை நாள் எனவும் உணவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக்த்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, […]
பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பணம் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு. பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பும் ஆட்சியர்களே சாரும். ஜனவரி 9-ஆம் தேதிக்கு பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்க […]
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அறிவிப்பு. 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000 நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு என தமிழக அரசு தகவல். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்து ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், திமுக அரசு வழங்கிய […]
நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு. ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 362 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மற்றும் அது […]
நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு. நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, ரேசன்கடைகளுக்கு அரிசி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, […]
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை 14% லிருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் […]
ரேஷன் கடை பணியாளர்கள் கவலைப்படாமல் பணியாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டனர் என்றும் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு […]
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல். தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும். […]
குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் […]
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி […]
ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க […]
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்மொழி கல்வியில் 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பால் […]
நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை […]
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் […]
பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் முடிவடைந்த பின்பும் பொங்கல் தொகுப்பை பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 17ஆம் தேதி காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு […]
நியாய விலைக்கடைகளில் இன்றியமையா பண்டங்களை, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெறலாம என உணவுப் பாதுகாப்புத்துறை அறிவிப்பு. நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாய விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், எந்தவொரு அட்டைதாரரும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அறுவலகங்களுக்கு இக்கோரிக்கை […]
தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில், நியாய […]