நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

சிதம்பரத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார்.

Train - MK Stalin

கடலூர் :கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.

குறிப்பாக, சிதம்பரத்தில் நாளை (ஜூலை 15) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைக்க, இன்று மாலை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு, நேரடியாக கொண்டு சேர்ப்பதற்காக 10,000 சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்வதாகும். ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் – நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

unknown node

இத்திட்டம் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி, அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் உடனடியாக பதிவு செய்து, அரசு சேவைகளை திறமையாக வழங்குவது இலக்காக உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பிப்ரவரி 2025-ல் முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.1,476 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்ததோடு, 178 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருந்தார்.