14 தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Fishermen -Arrest

சென்னை :தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்குப்பின் மீனவர்கள் புத்தளம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்திய – இலங்கை கடல் எல்லை வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளதால், இரவு நேரங்களில் எல்லை தாண்டுவது நிகழ்கிறது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.