அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிருவாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்ஆர் இளங்கோ, அருள்மொழி, லட்சுமி நாராயணன் ஆகிய வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
unknown node