வாய்க்காலில் விழுந்த அதிமுகவினர்... மயிரிழையில் தப்பிய செல்லூர் ராஜு..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையின்  சிறப்பை காட்டும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையின்  சிறப்பை காட்டும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கவுள்ள  ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த  ரவுண்டானாவை திறந்துவைக்க  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். விழாவை தொடங்கி பிறகு  செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அருகிலிருந்த சாக்கடையில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர்  விழுந்தனர். அமைச்சரும் நிலை தடுமாறி விழ போகும்போது  போலீசார் காப்பாற்றினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.