சென்னை :பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தவெக தலைவர் விஜய், பாமக நிறுவனர் ராமதாஸ் என மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் முர்மு :
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில்,“பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி ஜியின் பிறந்தநாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் வலிமையால், நீங்கள் அசாதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள்.
நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளீர்கள். தேச உணர்வோடு உங்களின் புதுமையான முயற்சிகள் முதலில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழவும், எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்”, என பதிவிட்டிருந்தார்.
unknown nodeமுக.ஸ்டாலின் வாழ்த்து:
பிரதமர் மோடிக்கு, முக.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், “பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்”, என்று பதிவிட்டிருந்தார்.
unknown nodeதவெக தலைவர் விஜய் :
தவெக கட்சி தலைவரான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் மோடிக்கு, “பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்”, என பதிவிட்டிருந்தார்.
unknown nodeஆளுநர் ஆர்.என்.ரவி :
நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர எனது பிரார்த்தனைகள்”, என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
The people of Tamil Nadu extend their heartfelt wishes to our beloved Prime Minister Thiru Narendra Modi on his birthday for his long and healthy life. Under his revolutionary transformative leadership the nation is confidently marching ahead to her destiny of#ViksitBharatby…pic.twitter.com/PsspnxAVsW
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)September 17, 2024
பாமக ராமதாஸ் :
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது எக்ஸ் பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். இந்தியத் திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”, என பதிவிட்டிருந்தார்.
unknown node