சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்ட்டுள்ள ஞானசேகரன் சார் என்று தொலைபேசியில் பேசியதாக மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் யார் அவர் என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதலில், இந்த வழக்கை சென்னை காவல்துறை விசாரித்து வந்தபோது ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் விசாரணை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை பிரச்சினைகளை தடுப்பது குறித்து நடவடிக்கையை தீவிரபடுத்துவதற்கு பேசுவதற்கு ஆளுநரை அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த தகவலை தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்குஆளுநரை சந்தித்து […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மதியம் 1 மணி அளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திடீரென விஜய் ஆளுநரை சந்திக்க முக்கியமான காரணம் பற்றிய தகவலும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சந்திப்புகான முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பற்றி பேசுவதற்காக தான். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஞானசேகரன் என்பவரை போலீசார் […]
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு, பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக […]
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து தமிழக அரசு அதற்கான புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை மூலமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை […]
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையே வெடித்தது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தவெக தலைவர் விஜய், பாமக நிறுவனர் ராமதாஸ் என மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வாழ்த்துகளைத் […]
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று சேலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. தங்க முட்டையிடும் வாத்தை யார் தான் அறுப்பார்கள். – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த தமிழக சட்டப்பேரவை மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருக்கிறார். அதற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. […]
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து,ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும், முன்னாள் தேசிய பாதுகாப்பு […]