18 மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டு – முதல்வர் ட்வீட்

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த தமிழக காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு.
ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த 6 பேரை ஐதராபாத் சம்சாத்பூர் அருகே கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கொள்ளையர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் தற்போது ஐதராபாத் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை மீட்டு வரும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன ரூ.15 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பகிர்ந்துள்ளார்.
18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025