தமிழகத்தில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

anti-terrorist unit

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் அமைக்கப்படும் புதிய தீவிரவாத தடுப்பு பிரிவில் 1 டிஐஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், … Read more

நெருங்கும் கனமழை…முன்னெச்சரிக்கைகள் தீவிரம்… காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

Monsoon Control Room

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் 21 முதல் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழையளவு மேலும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருநள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ள கடந்த செப்டம்பர் மாதமே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னெச்சரிக்கை … Read more

சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்! கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை!

Chinese firecrackers

தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என  பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என … Read more

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

chennai high court

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் … Read more

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? – கருக்கா வினோத் வாக்குமூலம்!

karukka vinoth

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என்று போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன்பு இருக்கும் பேரிகேட் (தடுப்பு) அருகில் மிகுந்த பாதுகாப்பு இருந்து கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக குற்றவாளியை … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டீல் வீச்சு.! கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்.! 

Karukka Vinoth

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் கேட் அருகில் பேரிகாட் (தடுப்பு) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயம் அருகில் இருந்த சென்னை பெருநகர காவல்துறையினர் கருக்கா வினோத்தை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பரிமுதல்செய்தனர். கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு … Read more

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு.!

CPI Chennai Office

சென்னை தி-நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ … Read more

ஆளுநர் மாளிகை பெட்ரோல் பாட்டில் வீச்சு.. மயிலாடுதுறை சம்பவம்.! தமிழக காவல்துறை விளக்கம்.! 

Tamilnadu Police Release CCTV footage for karuka vinoth petrol bomb incident

நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை முன்பு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு (தடுப்பு பலகை) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு! புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

GOVERNOR HOUSE

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

Karuka Vinoth - Raj bhavan Chennai

நேற்று ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரிகார்ட் பக்கம் பெட்ரோல் குண்டு வீசிய உடனேயே பாதுகாப்பு பணியில் இருந்த  காவலர்கள் கருக்கா வினோத்-ஐ தடுத்து உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் இருந்து வீசுவதற்கு வைத்து தயார் நிலையில் வைத்து இருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட … Read more