தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து பதிவான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Sexual harassment

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த குற்றசாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

மூன்றரை வயது குழந்தைக்கு.,

மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட சீர்காழி அருகே அங்கன்வாடி ஒன்றில் மூன்றரை வயது குழந்தை பயின்று வந்துள்ளது. நேற்று திடீரென அந்த குழந்தையை அங்கு அருகில் காணவில்லை என தேடிய அங்கன்வாடி ஊழியர்கள், அங்கன்வாடி அருகே பலத்த காயத்துடன் குழந்தையை மீட்டெடுத்தனர். முதலில் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து பிறகு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட குழந்தையை அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அங்கன்வாடி அருகே காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த குழந்தையின் உறவினர் என 17 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில், 17 வயது சிறுவன் தான் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தது என்றும், குழந்தை சத்தம் போட்டதால் கல்லால் அடித்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிகளுக்கு..,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரெட்டியூர் எனும் மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளின் பெற்றோர், குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதில், அப்பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பிரபு என்பவர் மாணவிகளிடம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர்.

இதனை அடுத்து, வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் பெற்று, நேற்று ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவரை கைது செய்தனர். அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்.,

தூத்துக்குடி கோவில்பட்டி பகுதியில் காதல் திருமணம் செய்த தம்பதி, தங்கள் 6 மாத குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர்.  இதில் பெண்ணின் கணவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்றதால் பெண் தனது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த 2 நபர்கள் ஒருநாள் பகலில் வீடுபுகுந்து குழந்தை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இரண்டு பேரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதேபோல நள்ளிரவிலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை கணவரிடம் பெண் கூறியுள்ளார். உடனே கணவர் ஊர் திரும்பியதும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவல் கொண்டு பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்டது அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மாரிச்செல்வம், மாரியப்பன் எனும் இருவர் என தெரிந்தது. இருவரையும் போலிசார் தேடிவந்த நிலையில் அவர்கள் அருகில் இருந்த மலைப்பகுதியில் பதுங்கியிருந்ததை கண்டறிந்த போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அப்போது, மாரிச்செல்வம் போலீசாரை தாக்க முற்பட்டதால், போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாரியப்பன் தப்பியோட முயன்றபோது தவறி விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal