மங்கள இசை, தப்பாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பாமக மகளிர் மாநாடு தொடங்கியது!

மாநாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் கோ.க. மணி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

PMK Maanadu

மயிலாடுதுறை :மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது. மாநாடு கோவலன்-கண்ணகி நாடகத்துடன் துவங்கி, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.

மாநாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது, பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, அரசு பதவிகளில் பெண்களின் பங்கேற்பு, சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் மது, போதைப் பொருட்களால் ஏற்படும் சீரழிவிலிருந்து பாதுகாப்பது போன்ற முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

சுமார் 7,000 முதல் 10,000 பெண்கள் பங்கேற்றதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில், 11,000 முதல் 14,000 நாற்காலிகள் அமைக்கப்பட்டன. மேலும், குடிநீர், கழிப்பறை வசதிகள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்றும் 1,300 காவலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டிற்கு வருவோருக்கு வழிகாட்டி பலகைகள், வாகன நிறுத்த வசதிகள் மற்றும் எல்.இ.டி திரைகள் மூலம் நிகழ்ச்சிகளைக் காண வசதி செய்யப்பட்டது.

தற்பொழுது, மாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் கோ.க. மணி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.