தமிழகத்தில் மேலும் இரண்டு எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .தமிழகத்தில் அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. திண்டுக்கல் […]