சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் […]
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதேபோல், காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் […]
மக்களவை தேர்தல் : தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இது நிலையில், பல்வேறு இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுகவின் கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சுதா 5,16,247 வாக்குக்ளை பெற்று 2,70417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் பாபு 2,45,830 வாக்குகளும், […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், […]
கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்..! இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் […]
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று மதியம் […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு, வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றும் அதே போல தில்லையாடியில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருக்கும் போது, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உடல் […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. […]
தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய […]
மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. அங்கு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தாலும், இன்னும் அங்கு மழை தொடர்வதாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கப்படி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து ஓய்ந்து தற்போது மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதிகளவு மழைபொழிவுக்கு உள்ளான மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது […]
அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை என வெள்ள ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் பேட்டி. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 செமீ கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை […]
ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ராஜப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த […]
தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடையை நீக்கக் கோரி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, உயிரே போனாலும் பரவாயில்லை […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
தருமபுரம் ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.க., திராவிடர் விடுதலை கழகம், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரம் 27-வது ஆதின நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் ஆர்என் ரவி மயிலாடுதுறை சென்றுள்ளார். அங்கு ஆளுநர் செல்லும் வழி எங்கும், கருப்புக்கொடியை ஏந்தி பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 16 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பார்த்திபன் உள்ளிட்ட 16 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர். சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 16 பேரை திருவாரூர், தஞ்சைக்கு மாற்றி டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். ஆய்வாளர் கவிதா ஏற்கனவே மாற்றப்பட்ட […]