சென்னை :பா.ம.க நிறுவனர் ராமதாஸின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பது சட்டவிரோதமாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரில், ஒட்டுக்கேட்பு கருவியை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை தொலைபேசி மற்றும் நேரடி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ், இந்த ஒட்டுக்கேட்பு கருவி விலை உயர்ந்ததாகவும், லண்டனில் இருந்து வாங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது மகன் அன்புமணி மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது பாமகவில் உள்ள தலைமைப் பதவி போட்டியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. புகார் அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும், ஒட்டுக்கேட்பு கருவி இன்னும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. இ
