பரந்தூர் விமான நிலையம் – நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பு வெளியீடு!

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார்

parandur airport

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் எங்களின் வாழ்வாதாரம் சீர்குலையும் எனவும் கூறி கிராம சபை கூட்டங்களில் புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பதற்கான பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிட்டது.

Read More –எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..!

இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 2.77.76 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொடவூர் கிராமத்தில் 37 நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீதான ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

unknown node