காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் எங்களின் வாழ்வாதாரம் சீர்குலையும் எனவும் கூறி கிராம […]
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகபப்டுத்த நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 19.24 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வானத்து சீனிவாசன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு […]
பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன் என சீமான் பேட்டி. சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வளசரவாக்கத்தில் உள்ள கக்கன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன். பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தரவேண்டும் என கூறுவதை […]
மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை என டிடிவி தினகரன் ட்வீட். சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஏறத்தாழ 3,500 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களும், சென்னைக்கு குடிநீர் […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும் நிலையில் அமைச்சர்கள் […]
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணியாக செல்கின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணியாக செல்கின்றனர். வாயில் கருப்பு கொடி கட்டி, கையில் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக செல்கின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். […]
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான […]
பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை அடுத்து சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 4500 ஏக்கர்களுக்கு அதிகமான நிலங்கள் கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் […]
பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக […]
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட பிறகு 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தை அடுத்து, இரண்டாவதாக சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான திட்ட வரைவுகளும் தயார் ஆனது. ஆனால் இதனை எதிர்த்து, […]
புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல். சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்றும் விமான […]
புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் புதிய பன்னாட்டு விமான நிலையம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு […]