காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் எங்களின் வாழ்வாதாரம் சீர்குலையும் எனவும் கூறி கிராம […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து […]
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் பேரணி பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் […]
சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக எம்பி கனிமொழி மற்றும் சோமு இருவரும் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.