திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் – விஜய பிரபாகரன்

Vijaya Prabhakaran, son of dmdk leader Vijayakanth, praised Chief Minister MK Stalin for his good governance.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டு.

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார்.

ஆனால்.வாக்கு சதவீதம் அப்படியேதான் உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். எங்களது இலட்சியத்தை நோக்கி பயணிப்போம். இதையடுத்து பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். பழைய நிலைக்கு திரும்ப சிறிது நாட்கள் ஆகும். எங்களால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறோம்.

மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்று பாராட்டு தெரிவித்தார். முக ஸ்டாலின் தலைமையிலான திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என குறிப்பிட்டார்.