ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – ராமதாஸ் வலியுறுத்தல்

Default Image

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியான பிறகு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

தமிழக ஆளுநர் 73 நாட்களாகியும் ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வது நியாயம் அல்ல. ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும் குடும்ப சீரழிவுகளும் தொடர் கதையாகி வருகின்றன. சூழலின் அவசர தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்