ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியான பிறகு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழக ஆளுநர் 73 நாட்களாகியும் […]
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி 53 நாள் கடந்து விட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு நவம்பர் 25-ஆம் தேதியே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டம் என்ற […]
சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு […]
ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அவசர சட்டம் முன் வரவை சட்டப்பேரவையில் […]
ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது என வைகோ குற்றச்சாட்டு. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய […]
ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கம். புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை […]
தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது என பாமக தலைவர் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை நீடித்து வருகிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி […]
நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம். ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. அதே நேரத்தில், இதற்கான சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி […]
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ம் தேதி […]
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டத்தினை தடுக்க தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர் பணத்தையும், உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு இன்று காலை முதலமைச்சர் முகஸ்டலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் நிச்சயம் தடை விதிக்கப்பட்டும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தான் ஆன்லைன் ரம்மி குறித்து கருத்து கேட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி கருத்து கேட்பு குறித்து இபிஎஸ் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது என்றார். அரசு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி […]
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு […]
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப மற்றும் வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங்கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக […]
ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில்,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன்,ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் இடம்பெற்றுள்ளனர். தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் […]
ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட். அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் பகுதியில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் (வயது 30) என்பவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த காவலரின் உடலை கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் சரவண குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதல் […]
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தகவல். ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனிடையே, நாடெங்கிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பல குடும்பங்கள் பணத்தையும், உயிரையும் இழந்துள்ளனர். […]
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அடுத்த நாள் தமிழக அரசு முதன் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து […]
ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் நிகழ்வது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றை […]
ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை. முன்பெல்லாம் விளையாட்டு என்றால் கிரிக்கெட், ஹாக்கி, கேரம் என கைவினைப்பொருட்கள் உதவியுடன் விளையாடி உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய தலைமுறைகள் முழுவதையும் தங்களது மொபைல் போனிலேயே முடித்து விடுகின்றனர். அண்மை காலங்களாகவே தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக சூதாடி அதில் தங்களது பணத்தை இழப்பதால் விரக்தி அடைத்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்நிலையில் இது […]