தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளது போல தெரிகிறது என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சியை போல அரசை அவர் விமர்சனம் செய்வது அழகா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது ஆளுநர் ரவி அவர்களுக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது, தினந்தோறும் தன்னைப் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு […]
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்என் ரயில் தாமதித்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஆளுநரின் செயல் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய சரமாரி கேள்வி எழுப்பி, ஆளுநருக்கு செக் வைத்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின்போது, மசோதாக்கள் தொடர்பான பிராமண பத்திரம் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருசில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக அரசு இயற்றிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரையில் ஆளுநர் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளார். ஒரு ஆளுநர் இந்தளவுக்கு பிரச்னைக்குரிய நபராக மாறியது என்பது இதுவரை தமிழக வரலாற்றில் கிடையாது. எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும், அதைப்பற்றி அக்கறை […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதித்து வந்த ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. தமிழ்நாடு அரசு: அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், எந்த […]
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்து நவ.20ல் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், ஆளுநர் ரவி. மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த […]
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்து நவ.20ல் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார். அதாவது, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மனுவில் புகார் அளித்துள்ளனர். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அரசு அனுப்பும் மசோதாக்கள், […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என்று போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன்பு இருக்கும் பேரிகேட் (தடுப்பு) அருகில் மிகுந்த பாதுகாப்பு இருந்து கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக குற்றவாளியை […]
ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியான பிறகு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழக ஆளுநர் 73 நாட்களாகியும் […]
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம். கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜனவரியில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக […]
ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த பாமக தயாராக இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் பதிவு. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இவர் ஆன்லைன் சூதாட்டம் அடிக்கடி விளையாடி அதில் அடிமையாகி இருந்ததாகவும், நண்பர்களிடம் கடன் வாங்கி அதிக பணத்தை தோற்றதால், தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி என்று பாமக தலைவர் அன்புமணி […]
சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் உரை. திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய சுதந்திர போராட்டம் மக்களை மையமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டு, திருத்தி எழுந்தப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மொழிகளை விட நமது தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளம் மிக்கவை. ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்ற எண்ணம் […]
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி 53 நாள் கடந்து விட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு நவம்பர் 25-ஆம் தேதியே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டம் என்ற […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார். அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் […]
சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு […]
ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அவசர சட்டம் முன் வரவை சட்டப்பேரவையில் […]
ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது என வைகோ குற்றச்சாட்டு. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய […]
எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். […]