அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

Higher Education Minister Ponmudi explains that 20 lakh students will write the online exam.

20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத்தவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்றும் ஆன்லைன் தேர்வால் 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்த அமைச்சர் அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.