அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆகவும்,இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 […]
தகைசால் தமிழர் திரு.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு […]
சென்னையில் அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பின்பும் ஆளுநர் ஒப்புதல் ஒப்புதல் வழங்காத நிலையில், அமைச்சர் பொன் முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க […]
கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு. 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி. சட்டவிரோதமாக செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரும் அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2006-11-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார். வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொன்முடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். […]
4,000 கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரி பேராசிரியர்கள் இட மாற்றம் தொடர்பான கலந்தாய்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 4,000 துணை பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும். 3,000 காலி பணியிடங்களுக்கு 5,408 பேர் கலந்தாய்வுக்கு […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பிரபு தனது மனுவை பொதுக்குழுவில் வாபஸ் பெற்றார். இதனால் போட்டியின்றி அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக ஆர்ஐ பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை […]
விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ […]
பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் […]
பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களை பார்த்து, நீங்கள் ஓசி-யில் தானே பேருந்தில் செல்கிறீர்கள்? வாய திறங்க… குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வாங்குனீங்களா? என கேட்டிருந்தார். இது பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே செய்தவற்றை ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லி சொல்லி காட்டியே வாக்கு கேட்கும் […]
பொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்காக 90 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா […]
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளோம். கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், […]
குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன என அமச்சர் பொன்முடி குற்றசாட்டு. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று […]
தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.17 நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. வரும் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது. நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் செயல்படுத்த துணைவேந்தர்கள் மாநாடு என்றும் மாநில அரசின் உரிமைகளை பயன்படுத்தி துணைவேந்தர் மாநாடு நடைபெறுவதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். அண்ணா பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம். தமிழகத்தில் உயர்கல்வி […]
தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 4,681 பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுகிறது என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கல்வியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு […]
ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய உத்தரவு. அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை http://penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை இன்று முதல் […]
தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழு பாடங்களை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், முழு பாடங்களையும் நடத்த உத்ராவிடப்பட்டது. […]
கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]