நாளை முதல் பழைய மெட்ரோ கார்டுகள் செல்லாது- மெட்ரோ நிர்வாகம் அதிரடி!

நாளை முதல் சிங்கார சென்னை அட்டை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை (மே 1, 2026) முதல் பழைய மெட்ரோ கார்டுகள் முழுமையாக செல்லாது என்றும், புதிய சிங்கார சென்னை அட்டை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை முதல் சிங்கார சென்னை அட்டை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. பழைய கார்டில் உள்ள இருப்புத் தொகையை புதிய சிங்கார சென்னை அட்டையில் மாற்றிக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் தங்கள் பழைய கார்டில் இருக்கும் பணத்தை இழக்காமல் புதிய அட்டைக்கு மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வழிமுறைகள் மெட்ரோ நிலையங்களில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளையில், மே தினத்தையொட்டி (மே 1, 2026) சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.சென்னை மெட்ரோ நிர்வாகம், பயணிகள் புதிய சிங்கார சென்னை அட்டையை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும், பழைய கார்டில் உள்ள இருப்பை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.இந்த மாற்றம் சென்னை மெட்ரோ அமைப்பை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.