PM Modi – பிரதமர் மோடி கடந்த 4ஆம் தேதி முதல், தமிழகம் , தெலுங்கானா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார். Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.! இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி அங்கு 15,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை துவங்கி வைத்தார். […]
சென்னையில் நடைபெற உள்ள மாரத்தானை முன்னிட்டு நாளை(ஜனவரி 6) அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ […]
கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இந்தியா 2023 ஆம் ஆண்டில் தொடங்கும் என்பதால், கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் (KMRC) ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுரா மற்றும் கொல்கத்தா இடையே நீருக்கடியில் மெட்ரோ இணைப்புக்கான சுரங்கப்பாதையை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை தாழ்வாரம் ஆற்றுப்படுகைக்கு கீழே 33 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும். இந்த சுரங்கப்பாதை வழியாக கிழக்கு மற்றும் மேற்கு மெட்ரோ வழித்தடங்கள் 500 மீட்டருக்கு மேல் இணைக்கப்படும். நீருக்கடியில் […]
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி […]
இன்று முதல் (13.03.2022) திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக,சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கூறியுள்ளதாவது: “சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டம்-ன் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை கி.மீ) பயணிகள் சேவை (9 இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களின் […]
மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் காலை 05:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. இன்று முதல் டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 28,000 பேர் பாதிக்கப்படும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று […]
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கப்படுகிறது. தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4-ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு, இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்குகிறது. இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு […]
மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில் கூறியதாவது, மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு […]
கொரோனா வைரஸ் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் என சிஎம்ஆர்எல் (CMRL) தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம், காலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 11 மணிவரை ரயில்கள் ஓடாது என தெரிவித்தனர். இந்நிலையில்,மார்ச் 23 முதல் காலை 6 முதல் 8 […]
சென்னையில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு […]
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில், பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறையும் சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் முதல்முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி நதியின் கீழ் கட்டப்பட்டிருக்கும் இந்த பாதையில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க தற்போது 3 அடுக்கு வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த பாதையானது 50 அடி அகலமும் 520 மீட்டர் தூரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்துகிறது. விரைவில் இந்த பாதையில் ரயில்கள் செல்லும் என்று […]
நேருபூங்காவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் வேலைகள் நடந்து வருகின்றது. சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து நடக்கும். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு விரைவில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை அடுத்த மாத இருதியில் தொடங்கவுள்ளது.
மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், […]