தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி கூடாது – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்
தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு.
தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சட்டத்தில் ஏற்கனவே தடை உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவம்பர் 26 மற்றும் 27-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிகளை மீறி அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தினால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.